மடு கல்வி வலயத்தில் இடம் பெற்ற மாணவர் பாராளுமன்ற முதல் அமர்வு-(படம்)
மடு கல்வி வலய பிரிவுக்குற்பட்ட பாடசாலை மாணவர்களின் மாணவர் பாராளுமன்ற முதல் அமர்வு இன்று புதன் கிழமை(15) காலை 10 மணியளவில் ஆண்டாங்குளத்தில் அமைந்துள்ள மடு வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
-மடு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி லூ.மாலினி வெனிற்றன் தலைமையில் இடம் பெற்ற மாணவர் பாராளுமன்ற முதல் அமர்வின் போது பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் கலந்து கொண்டார். -சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் திருமதி பி.செல்வின் இரேனியஸ்,மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் எஸ்.கேதீஸ்வரன்,மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது முதல் அமர்வு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் மாணவர் பாராளுமன்ற அமர்வின் நடவடிக்கைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மடு கல்வி வலயத்தில் இடம் பெற்ற மாணவர் பாராளுமன்ற முதல் அமர்வு-(படம்) 
 Reviewed by Author
        on 
        
November 16, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 16, 2017
 
        Rating: 
       
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment