வாஷிங்டன் வரை சென்று தாக்கும் புதிய ஏவுகணை: வடகொரியாவின் அடுத்த பிளான் -
வாஷிங்டன் வரை சென்று தாக்கும் வல்லமை உடைய புதிய ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து சோதனை நடத்தி வரும் வடகொரியா, கடந்த ஆண்டு நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனையால், உலகமே அதிர்ந்தது.
இதையடுத்து வடகொரியா தொடர்ந்து தன்னுடைய ஏவுகணை சோதனையை மேற்கொண்டு தான் வருகிறது. தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இது போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடகொரியா தெரிவித்திருந்தாலும், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகள் வடகொரியாவின் மீது கடும் கோபத்தில் உள்ளன.
இந்நிலையில் வடகொரியா கேஎன்- 20 என்ற புதிய ஏவுகணையை உருவாக்கியுள்ளதாகவும், இது வாஷிங்டன் வரை சென்று தாக்கும் வல்லமை உடையது எனவும், இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடிக்கும் முயற்சியில் வடகொரியா ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் வரை சென்று தாக்கும் புதிய ஏவுகணை: வடகொரியாவின் அடுத்த பிளான் -
Reviewed by Author
on
November 03, 2017
Rating:

No comments:
Post a Comment