பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்ற தென்னாப்ரிக்க பெண் -
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெய் நெல் பீட்டர்ஸ் என்பவர் 2017 ஆம் ஆண்டிற்கான ’மிஸ் யூனிவர்ஸ்’(Miss Universe) பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 26-ஆம் திகதி மிஸ் யுனிவர்ஸ் போட்டி வண்ணமயமாக நடைபெற்றது.
இவ்விழாவில் இந்தியா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், ஜமைக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலிருந்து 92 பெண்கள் பங்கேற்றிருந்தனர்.கொலம்பியாவின் லாரா, ஜமைக்காவின் டாவின்னா மற்றும் தென்னாப்பிரிக்காவின் டெமி லெய் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியபோதும் டெமி லெய் பிரபஞ்ச அழகியாக தேர்வானார்.22 வயதான இவர் வணிக மேலாண்மைப் படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
இவரிடம் நடுவர்கள், பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னை எது? எனும் கேள்வியை கேட்டுள்ளனர், அதற்கு அவர் அளித்த பதிலே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.
அந்த பதில் ”ஒரு சில நிறுவனங்களில் ஆண்கள் செய்யும் அதே பணியைத்தான் பெண்களும் செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 75 சதவிகிதம்தான் வழங்கப்படுகிறது. இது சரியான முறை அல்ல.” என்று பதிலளித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் ஐந்து இடங்களில், அமெரிக்கப் பெண்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்ற தென்னாப்ரிக்க பெண் -
Reviewed by Author
on
November 28, 2017
Rating:

No comments:
Post a Comment