மன்னார் தாழ்வுபாட்டின் உள்ளக பிரதான வீதி இளைஞர்களால் புணரமைப்பு...........
மன்னார் தாழ்வுபாட்டின் உள்ளக பிரதான வீதி இளைஞர்களால் புணரமைப்பு...........
தாழ்வுபாட்டின் பிரதான வீதியான ஆலயத்தில் இருந்து விளையாட்டு மைதானம் வரையாக அமைந்துள்ள வீதியானது மிகவும் கவலைக்கிடமாக காணப்படுகின்றது.
இவ்வீதியானது மழை காலங்களில் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதுடன்,மழை நீர் வழிந்தோட இடம் இன்றி பாதையில் நிரம்பி காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதனை கண்டு பொங்கி எழுந்த தாழ்வுபாட்டின் இளம் சிங்கங்கள் இருளையும் பொருட்படுத்தாது இன்று இரவு அவ் வீதியினை புணரமைத்து வெற்றி கண்டுள்ளனர்.
நாங்களே எங்கள் ஊரை காப்பாற்றுவோம் என்பதற்கு அடையாளமாக இப் பொதுப் பணியை செய்து காட்டியுள்ளனர்.
எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு
இவர்களைப் போன்ற இளைஞர் சமூகம் மன்னாரில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உருவெடுக்க உதவி செய்வோம்.
இவ் நற்பணியில் கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்......
மன்னார் தாழ்வுபாட்டின் உள்ளக பிரதான வீதி இளைஞர்களால் புணரமைப்பு...........
Reviewed by Author
on
November 17, 2017
Rating:

No comments:
Post a Comment