வவுனியாவில் கொட்டும் மழைக்கு மத்தியில் மனித சங்கிலிப் போராட்டம்....
வவுனியாவில் இன்று 2 பிற்பகல் 3.00மணியளவில் கொட்டும் மழைக்கு மத்தியில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திலிருந்து மாவட்ட செயலக பிரதான வாசல் வரையும் மனித சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்யுமாறும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன் நீக்குமாறும், அனுராதபுரத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கையினை நிறைவேற்றக்கோரியும் இன்று பிற்பகல் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திலிருந்து மாவட்ட செயலக பிரதான வாசல் வரையும் மனித சங்கிலிப் போராட்டம் கொட்டும் கடும் மழைக்கு மத்தியில் சமூக நிதிக்கான வெகுஜன அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடைமழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி பெண்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், வைத்தியர், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Reviewed by Author
on
November 02, 2017
Rating:

No comments:
Post a Comment