அதிகரிக்கும் பெண் சிறைக் கைதிகள் எண்ணிக்கை: வெளியான ஆய்வறிக்கை -
உலக அளவில் சிறைக் கைதிகளாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை கடந்த 17 ஆண்டுகளில் பாதிக்கு மேல் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2000-வது ஆண்டு வரை உலக அளவில் மொத்தம் 466,000 எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் சிறுமிகள் சிறை வாசம் அனுபவித்து வந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை கடந்த 17 ஆண்டுகளில் 53 சதவிகிதம் அதிகரித்து தற்போது அந்த எண்ணிக்கை 714,000 என எட்டியுள்ளதாக குறித்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதில் விசாரணை கைதிகளும், காவலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளும் அடங்குவர்.
இது உலக மக்கட்தொகையில் சுமார் 6.9 விழுக்காடு எனவும் தெரிய வந்துள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி சிறைகளில் 3,974 பேரும், வட அயர்லாந்து சிறையில் 51 பேரும், ஸ்காட்லாந்தில் 360 பேரும் உள்ளனர்.
ஆப்பிரிக்க மக்கள் தொகை அதிகரிப்பை கணக்கில் கொண்டால் அங்குள்ள பெண் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை சரிந்து வருவதாகவும்,
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இந்த என்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அதிர்ச்சி தகவலையும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவை பொறுத்த மட்டில் 200,000 பெண் கைதிகள் சிறையில் உள்ளனர். சீனா (107,000), ரஷ்யா (48,478), பிரேசில் (44,700), தாய்லாந்து (41,119) மற்றும் இந்தியா (17,834) என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிரேசில், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் துருக்கி நாடுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறை தண்டனை வழங்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால் மெக்சிகோ, ரஷ்யா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் குறித்த எண்ணிக்கையானது சரிந்து வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதிகரிக்கும் பெண் சிறைக் கைதிகள் எண்ணிக்கை: வெளியான ஆய்வறிக்கை -
Reviewed by Author
on
November 10, 2017
Rating:

No comments:
Post a Comment