செவ்வாய் கிரகத்துக்கு போக டிக்கெட் எடுத்தாச்சா?
செவ்வாய் கிரகத்துக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளோர் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
நாசாவின் Interior Exploration using Seismic Investigations, Geodesy and Heat Transport திட்டம் மூலம் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு வரும் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் திகதி செல்கிறது.
இந்த பயணத்திற்கான முன்பதிவை நாசா அறிமுகம் செய்தது, இப்படி முன்பதிவு செய்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் அனுப்பப்படும் என நாசா தெரிவித்திருந்தது.
இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலரும் முன்பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று நாசா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்துக்கு முன்பதிவு செய்துள்ளோர் பட்டியலில் அமெரிக்கா 6,76,773 பேருடன் முதலிடத்திலும், 2,62,752 பேருடன் சீனா இரண்டாம் இடத்திலும், 1,38,899 பேருடன் இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
மேலும் டிக்கெட்டில் பயணிகளின் பெயர் சிலிகான் மைக்ரோ சிப்களில் எழுதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு போக டிக்கெட் எடுத்தாச்சா?
Reviewed by Author
on
November 10, 2017
Rating:

No comments:
Post a Comment