விம்பம் பகுதியில்...49வருடங்களாக சாரணராகவும் ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உப முகாமையாளருமான K.F. ராஜேந்திரன்.
விம்பம் பகுதியில் நம்மோடு
பேசவருகின்றார் 49வருடங்களாக சாரணராகவும் ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உப முகாமையாளருமான K.F. ராஜேந்திரன்.
சாரணியம் என்றால்….
இவை சுருக்கமே பேடன் பவுல் சென்னவை இன்னும் விரிவாய் உள்ளது.
எனது குமாரசாமி பிரான்சிஸ் ராஜேந்திரன் சொந்த இடம் யாழ்ப்பாணம் என்றாலும் நான் படித்து புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி வேலைபார்த்து ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உபமுகாமையாளர் தற்போது சாரணப்பணியில் 49வருடங்களாக இருந்துகொண்டு வாழும் இடம் செபஸ்தியார் வீதி மன்னார் தான்.
- 1968-இராணி சாரணர்
- 1973-சாரணர் ஆசிரியராக பதவி(தரி சின்னம்)
- 1996-உதவி மாவட்டஆணையாளர்((பயிற்சி-A.D.C)
- 2000-உதவி தலைமைப்பயிற்றுனர்(A.L.T)
- 2009-2014 மன்னார் மாவட்ட ஆணையாளர்(D.C)
- சென் ஜோண்ஸ் அம்புளன்ஸ் சேவைப்படையணியிலும் பணியாற்றியுள்ளேன்.
- சமூக அமைப்புக்களிலும் சேவையாற்றுகின்றேன்.
- 2017-தலைமை பயிற்றுனர்(பயிற்சி C.L.T)
- 2017-மன்னார் மாவட்ட சாரணர் ஒருங்கிணைப்பாளர்
மன்னார் மாவட்டத்தின் சாரணியத்தின் சரித்திரம்
ஒரு பின்தங்கிய பகுதி என்ற கணிப்பும் வறண்ட பிரதேசம் கல்வியிலும் முன்னேற்றத்திலும் இலங்கையில் ஏனைய பகுதிகளை விட பின்தங்கியே நின்றது. இப்பின்னணியிலே மன்னார் மண்ணில் சாரணியத்தின் வளரச்சியை நோக்குதல் வேண்டும்.திரு.கு.பங்கிராஸ் திரு.N.A.ஜேசுதாசன் மற்றும் திரு.பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் ஆரம்பித்து வைத்துள்ளனர் அப்போது மாவட்ட ஆணையாளராக திரு.A.மமேந்திரன் என்பவர் சேவையாற்றியுள்ளார் இவரைத்தொடர்ந்து 05 ஆண்டுகளுக்கு ஒருவராக றியமிக்கப்படுவார்கள்.
மன்னார் மாவட்ட சாரணர்சங்கத்தினால் அவர்களின் பெயர்கள......
- திரு.கணேசசுந்தரம் -முகாமையாளர் கூட்டுறவுச்சங்கம்
- திரு.A.F..இராஜசிங்கம்-A.C.C.D
- அருட்சகோதரர் பேனடீன்
- திரு.X.F..பங்கிராஸ்
- அருட்சகோதரர் திமோத்தியூ
- திரு.A.R.சிறில் (முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி)
- திரு.M.சந்தியாப்பிள்ளை
- திரு.S.மாட்டீன் டயஸ் (முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி)
- திரு.யூட் பிகிறாடோ (முன்னாள்கோட்டக்கல்வி அதிகாரி)
- திரு.K.F.இராஜேந்திரன் உபமுகாமையாளர் இலங்கை வங்கி
- திரு.P.ஞானராஜ் உடற்கல்விப்பணிப்பாளர்
- அருட்சகோதரர் S.C.விஜயதாசன் அதிபர் மன்.நானாட்டான் ம.ம.வி
- இவரே தற்போது பதவியில் இருக்கின்ற ஆணையாளராவார்.
சாரணர் ஆவதால் உண்டாகும் நன்மை என்றால்---
சாரணர் ஆனால் அவனோ…. அவளோ… சமூதாயத்தின் இருந்து தனித்துவமான ஆளுமை-நேர்மை-திறைமை ஒழுக்கவிழுமியங்கள் என்பனவற்றில் பண்பாளனாகவும் நல்ல தலைமைப்பண்புடையவர்களகவும் திகழ்வார்கள் அதுமட்டுமல்ல சமூகத்தின் பிரதிநிதியாக துணிவாக இயங்கக்கூடியவர்களாக இருப்பார்கள் .சாரணியத்தில் அன்று இராணி சின்னம் என்றும் இன்று ஜனாதிபதி விருது என்றும் அழைக்கப்படகின்ற சிறந்த விருதினைப்பெற்றுக்கொள்வதற்கு மிகவும் கடினமாக தனது திறமைகளை வெளிப்படுத்தியே பெறலாம். இந்த ஜனாதிபதி விருது பெற்றவர்கள் அகில இலங்கைரீதியில் பல்கலைக்கழகம் தேர்வாகும் போதும் 15 புள்ளிகளும் ஏனைய துறைகளில் வேலைவாய்ப்பினை பெறும் போது நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது புள்ளிகள் வழங்கப்டுவதடன் முன்னுரிமை பெறுவார்கள் வெளிநாட்டு கல்விக்கும் முன்னுரிமை பெறுவார்கள்.
தற்போது எல்லாத்துறைகளிலும் பெண்களின் ஈடுபாடும் தலைமைத்துவமும் அதிகமாக இருப்பதால் ஆண்கள் மட்டும்தான் சாரணர் என்றில்லாமல் பெண்சாரணியர்களையும் உருவாக்கி வருகின்றோம் சாரணியத்தில் ஆண்கள் பெண்கள் என்றில்லை எல்லோரும் திறமையான ஆளுமையுடையவர்களே…
நான் சிறுவயதில் இருந்தே சாரணியனாக இருப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் பின் வளர்ந்து பாடசாலை விட்டு வெளியானதும் திரிசாரணர் பிரிவினரை பொறுப்பெடுத்து சுமார் இதுவரை 40மேற்பட்ட திரிசாரணர்களை உருவாக்கியுள்ளேன் திரி சாரணர் என்றால்-18-24வயது வந்தவர்கள் அத்துடன் ஜனாதிபதி விருதுக்கும் தரி சின்னம் (Wood Badge )பெறுவதற்கும் என்னால் முடிந்தவரை பயிற்சியளித்து கொண்டிருக்கின்றோம்.
சாரணர் செயற்பாடுகள் கொஞ்சக்காலம் திருப்திகரமான செயற்பாடக இருக்கவில்லை வாரண்ட் தற்போது இலங்கை சாரணிய சங்கத்துடன் கொழும்பு தலைமைக்காரியலத்துடன் இணைந்து திறம்படசெயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது சமீபத்தில் நானாட்டான் பகுதியில் சாரணியர்கள் பாசறை வைத்தோம்.
மன்னார் மாவட்டத்திற்கு என்று இயங்குகின்ற இணையமான நியூமன்னார் இணையம் மூலமாக மன்னாரில் உள்ள ஒவ்வொரு துறையில் உள்ள கலைஞர்களை வெளிக்கொணரும் செயற்பாடு பாராட்டுக்குரியது தொடரட்டும் உங்களது சேவை எனது இல்லத்திற்கு வருகைதந்து என்னை செவ்வி கண்ட வை.கஜேந்திரன் ஆகிய உங்களுக்கும் உங்களது இணையநிர்வாகத்திற்கும் எனதும் எனது சாரணியர்கள் சார்பாக வாழ்த்துக்கள் கூறுகின்றேன் இறையாசியுடன்…
வை.கஜேந்திரன்


விம்பம் பகுதியில்...49வருடங்களாக சாரணராகவும் ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உப முகாமையாளருமான K.F. ராஜேந்திரன்.
Reviewed by Author
on
December 17, 2017
Rating:
Reviewed by Author
on
December 17, 2017
Rating:
























No comments:
Post a Comment