கல்வி அமைச்சின் சுற்று நிருபங்கள் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட வேண்டும்! அகில விராஜ் -
கல்வி அமைச்சின் சுற்று நிருபங்கள் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
எதிர்வரும் காலங்களில் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் சுற்று நிருபங்கள் தமிழ் மொழியின் ஊடாகவும் வெளியிடப்பட வேண்டும்.
தற்போது கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் சுற்று நிருபங்கள் சிங்கள மொழியில் மட்டுமே வெளியிடப்படுகின்றது.
இதனால் தமிழ் மொழிமூல பாடசாலை நிர்வாகங்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடுகின்றது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு சிங்கள மொழி மூலமான சுற்று நிருபங்களை அனுப்பி வைப்பதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்த சிக்கல்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் தமிழ் மொழியிலேயே சுற்று நிருபங்களை அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் சுற்று நிருபங்கள் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட வேண்டும்! அகில விராஜ் -
Reviewed by Author
on
December 24, 2017
Rating:

No comments:
Post a Comment