இலங்கையரை ஒப்படைக்குமாறு எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கவில்லை! -
மாலைத்தீவில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கி தாரியான இலங்கையரை ஒப்படைப்பதற்கு, இலங்கை அரசாங்கம் எந்தவொரு கோரிக்கையினையும் முன்வைக்கவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு சட்டமா அதிபர் மொஹமட் அனில் கருத்து தெரிவிக்கையில், “இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு இடையில் குற்றவாளிகளை பறிமாற்றிக்கொள்வதில் நடைமுறை ஒன்று காணப்படுகின்றது.
எனினும், தமது நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் எந்தவொரு கோரிக்கையினையும் முன்வைக்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவு ஜனாதிபதி Yaameen Abdul Qayyoomஐ படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையரை ஒப்படைக்குமாறு எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கவில்லை! -
Reviewed by Author
on
December 05, 2017
Rating:

No comments:
Post a Comment