அண்மைய செய்திகள்

recent
-

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டாம்! -


வட மாகாணசபை உள்ளிட்ட எந்தவொரு மாகாணசபைக்கும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டாம் என முன்னாள் பொலிஸ் பிரதானிகள் , அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் பொலிஸ் பிரதானிகளின் வருடாந்தக் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது பொலிஸ் திணைக்களத்தை துண்டாடுவதாகும் எனவும், பொலிஸாரின் சீருடைகளையும் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான தீர்மானம் ஒன்றையும் முன்னாள் பொலிஸ் பிரதானிகள் அண்மைiயில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றிக் கொண்டுள்ளனர்.
மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதனால் நாட்டின் எந்தவொரு இடத்திலிருந்தும் அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யக்கூடிய 119 பொலிஸ் அவசர சேவையின் உதவியை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதனால் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவு ஒன்பது துண்டுகளாக பிளவடையும் எனவும் இது ஓர் ஆபத்தான நிலைமை எனவும் தெரிவித்துள்ளனர்.
மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதனால் வித்தியா கொலை போன்ற சம்பவங்களுக்கு நீதியை வழங்க முடியாது என முன்னாள் பொலிஸ் பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டாம்! - Reviewed by Author on December 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.