அணு ஆயுதப் போர் எந்நேரத்திலும் வெடிக்கலாம்: வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை -
அணு ஆயுதப் போர் எந்த நேரத்திலும் தொடங்கும் என்று வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. தென்கொரியாவையும் அதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவையும் தரைமட்டமாக்கி விடுவோம் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வருகிறார்.
இந்நிலையில், வடகொரிய அச்சுறுத்தலை சமாளிக்க, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்க விமானப் படை வீரர்கள் கொரிய தீபகற்பப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரிய தீபகற்ப பகுதியில் தென் கொரியா, அமெரிக்கா போர் பயிற்சிகளை தொடர்ந்து வரும் நிலையில், அணுஆயுத போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வடகொரிய - தென்கொரிய எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து அங்கிருக்கும் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் குடும்பங்களை தென் கொரியாவிலிருந்து வெளியேறச் சொல்லி அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம் கூறும்போது, "கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வீரர்களின் குடும்பங்கள் தென்கொரியாவில் தங்கி இருப்பது சரியானது அல்ல" என்று கூறியுள்ளார்.
அணு ஆயுதப் போர் எந்நேரத்திலும் வெடிக்கலாம்: வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை -
Reviewed by Author
on
December 04, 2017
Rating:

No comments:
Post a Comment