மன்னார் மறைமாவட்ட பட்டித்தோட்டம் தூய நீக்கிலார் ஆலய திருவிழா,,,,
மன்னார் மறைமாவட்ட எழுத்தூர்ப் பங்கின் துணை ஆலயமான பட்டித்தோட்டம் தூய நீக்கிலார் ஆலயத்தின் திருவிழா 06.12.2017 புதன் கிழமை காலை கொண்டாடப்பட்டது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி A.விக்ரர் சோசை அடிகளார் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றிச் செபித்தார். பங்குத்தந்தை அருட்பணி P.இயேசு ராஜா அடிகளார் அனைத்து ஆன்மிக வழிபாடுகளையும் சிறப்பாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் ஆயத்தம் செய்திருந்தார்.
இத்திருப்பலியில் அருட்பணி.ஜெறோம் லெம்பேட் அ.ம.தி. அடிகள், அருட்பணி.சேவியர் குரூஸ் அடிகள், அருட்பணி.அல்பன் ராஜசிங்கம் அ.ம.தி. அடிகள், அருட்பணி. செபமாலை துரம் அ.ம.தி அடிகள். அருட்பணி. ராஜநாயகம் அடிகள், தோட்டவெளி பங்குத்தந்தை அருட்பணி.செபமாலை அடிகள், அருட்பணி.விமல் அ.ம.தி அடிகள் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் பலர் கலந்து செபித்து திருப்பலி
நிறைவில் தூய நீக்கிலாரின் திருவுருவப் பவனியும் ஆசீர்வாதமும் இடம் பெற்றது.
மன்னார் மறைமாவட்ட பட்டித்தோட்டம் தூய நீக்கிலார் ஆலய திருவிழா,,,,
Reviewed by Author
on
December 08, 2017
Rating:
Reviewed by Author
on
December 08, 2017
Rating:









No comments:
Post a Comment