தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தவிசாளராக இருந்த ஓருவர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியுன் இணைந்து கொண்டனர்.
வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (10.12.2017) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இணைந்து கொண்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபை தலைவராக விளங்கிய முருகுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களுமே இவ்வாறு இணைந்து கொண்டனர்.
இதில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, இணை ஓருங்கிணைப்பாளர் தம்பாபிள்ளை பிறமேந்திர ராஜா, மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.போரால் பாதிக்கப்பட்ட தமது பிரதேசத்தை முன்னர் தான் தலைவராக இருந்த காலத்தில் அபிவிருத்தி செய்ய முடியவில்லை எனவும் அரசுடன் இணைந்து அபிவிருத்தியாளர் முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக்கட்சி வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றும் எனவும் இதன்போது தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு
Reviewed by Author
on
December 10, 2017
Rating:

No comments:
Post a Comment