தேர்தலில் த.தே.கூட்டமைப்பின் நிலை? பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சூளுரை -
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் மாற்றுக் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் களமிறங்க தீர்மானித்துள்ள நிலையில், அவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கும் என அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடுபவர்கள் தொடர்பிலோ அல்லது கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிடுபவர்கள் குறித்தோ நாம் அலட்டிக்கொள்ளமாட்டோம்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாக இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. இந்தக் கூட்டமைப்பை எந்தச் சக்தியாலும் அசைக்கமுடியாது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆசனப் பங்கீடு தொடர்பில் ஒருமித்த தீர்மானத்துக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வந்துள்ளன.
எத்தடை வரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிவாகை சூடிய வரலாற்றை எவரும் மறந்திடலாகாது என குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தலில் த.தே.கூட்டமைப்பின் நிலை? பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சூளுரை -
Reviewed by Author
on
December 06, 2017
Rating:
Reviewed by Author
on
December 06, 2017
Rating:


No comments:
Post a Comment