வவுனியா ஊடகவியலாளர்கள் ஐவருக்கு விருது! -
வவுனியாவைச் சார்ந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைரவபுளியங்குளத்தில் இயங்கிவரும் சர்வதேச கேம்பிறிட்ஜ் கல்லூரியினால் (ICC Campus) இன்று ஓவியா விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடாத்திய விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் இலங்கைக்கான முதல்வர் சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன், ஆயுபோவான் நிறுவனத்தின் கனேடிய பணிப்பாளர், இலங்கைக்கான இயக்குநர், ஐ.சி.சி கம்பஸ் நிறுவனத்தின் தலைவர் என பலரும் கலந்து கொண்டு குறித்த கல்லூரியின் 9 பேர் கொண்ட தெரிவுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்களான பொன்னையா மாணிக்கவாசகம், பரமேஸ்வரன் கார்த்தீபன், பாலநாதன் சதீசன், பாஸ்கரன் கதீசன், குமாரசிங்கம் கோகுலன் ஆகிய ஊடகவியலாளர்கட்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் கல்வி, சமூக சேவை சினிமா ,மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
வவுனியா ஊடகவியலாளர்கள் ஐவருக்கு விருது! -
Reviewed by Author
on
December 23, 2017
Rating:

No comments:
Post a Comment