மாதவிடாய் நேரத்தில் மார்பகத்தில் வலியா? இதை சாப்பிடுங்கள் -
இவ்வாறு மாதவிடாய் காலத்தில் வரும் மார்பக வலியில் இருந்து தப்பிக்க சில இயற்கை வைத்திய முறைகள் இதோ,
மாதவிடாய் காலத்தின் மார்பக வலியை போக்குவது எப்படி?
- மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் அல்லது உளுந்தை அரைத்து பற்று போடலாம்.
- இளஞ்சூடான தண்ணீரை பருகலாம் அல்லது டீ போன்ற ஏதேனும் ஒரு சூடான திரவ ஆகாரத்தை குடிக்கலாம்.
- ஒரு துணியில் ஐஸ்கட்டிகளை போட்டு, அதை மார்பக பகுதியில் 10-20 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கலாம்.
- ஒரு டம்ளர் பாலில் 6-8 பொடியாக நறுக்கிய பூண்டுகளை போட்டு சூடாக்கி பூண்டுடன் சேர்த்து குடிக்க வேண்டும்.
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை 1 டம்ளர் பாலில் கலந்து சூடாக்கி அதில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து குடிக்க வேண்டும்.
- ஒரு துளி பேக்கிங் சோடாவை 1 கப் சூடான தண்ணீரில் கலந்து, குடித்தால் மார்பக வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலை ஒன்றாக கலந்து மார்பக பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
- சிறிதளவு சீரகத்தை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி சீரகத்தை வடிகட்டி அந்த சீரக நீரை மட்டும் குடிக்க வேண்டும்.
- மாதவிடாய் காலத்தில் வரும் மார்பக வலியை தடுக்க இளநீர் அல்லது வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்ல பலனை பெறலாம்.
- முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
- உலர்ந்த புதினா இலையோடு 1 ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
- கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, அதில் தினமும் 1 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
- இலந்தை இலை, மாதுளை இலை ஆகிய இரண்டையும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து கஷாயம் செய்து 200 மில்லி அளவு காலையில் குடிக்க வேண்டும்.
மாதவிடாய் நேரத்தில் மார்பகத்தில் வலியா? இதை சாப்பிடுங்கள் -
Reviewed by Author
on
December 06, 2017
Rating:

No comments:
Post a Comment