யாழ்ப்பாணத்தில் V.N அக்கடமியில் பொங்கல் விழா....
யாழ்ப்பாணத்தில் 13.01.2018 அன்று வெகுவிமர்சையாக பொங்கல் விழாவானது இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தின் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் V.கஜரூபன் தலைமையில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையமான V.N அக்கடமியில் பொங்கல் விழாவானது பாரம்பரிய கலை வடிவங்களை மீண்டும் பறை சாற்றும் முகமாக.....
- குதிரையாட்டம்,
- கோலாட்டம்,
- காவடியாட்டம்,
- கரகாட்டம்,
- வேப்பிலையாட்டம்,
- மானாட்டம்,
- குரங்காட்டம்,
- சுளகாட்டம்
இவ் பொங்கல் விழாவில்
பிரதம விருந்தினராக
யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு.நா.வேதநாயகன் ஐயா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக
சுன்னாகத்தின் சனச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் திரு.க.இலட்சுமணசர்மா ஐயா அவர்களும்,தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி திரு க.நந்தகுமார் ஐயா அவர்களும்,யாழ் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரீகத்துறையின் விரிவுரையாளர் திரு .சி.ரமணராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இறுதியாக நகைச்சுவை நாடகமான பச்சோந்தி நாடகம் ஆசிரியர் வினோதனின் நெறியாள்கையில் ஆற்றுகை செய்யப்பட்டது.இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ,மாணவர்கள் பெற்றோர்கள் , என பலரும் சிறப்பித்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் V.N அக்கடமியில் பொங்கல் விழா....
Reviewed by Author
on
January 15, 2018
Rating:

No comments:
Post a Comment