37-வது ஐ.நா கூட்டத் தொடரில் இலங்கை மீது கடும் அழுத்தம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்....
ஐக்கிய நாடுகள் சபையின் 37 ஆவது கூட்டத்தொடரின்போது தாமதமாகிவரும் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விட யம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் øசைன் அதிருப்தியை வெளிப்படுத்
துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் திகதிவரை இடம்பெறவுள் ளது.
இதன்போது, இலங்கையின் பொறுப்புக் கூறல் பொறிமுறை தாமதமடைந்தால் அடு த்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித் தும் ஆணையாளர் இதன்போது தெளிவுபடு த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹ_சைனின் இலங்கை குறித்த அறிக் கையை தொடர்ந்து, இலங்கை அரசாங்க த்தின் சார்பிலும் அறிக்கையொன்று வெளி யிடப்படவுள்ளது. இதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் முன்வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதிலுள்ள சவால்கள் குறித்தும் இலங்கை ஐ.நா.வை தெளிவுபடுத்தவுள் ளது.
37-வது ஐ.நா கூட்டத் தொடரில் இலங்கை மீது கடும் அழுத்தம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்....
Reviewed by Author
on
January 15, 2018
Rating:

No comments:
Post a Comment