மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 2018ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு இளைஞர் பரிமாற்று வேலை திட்டத்துக்கு இளைஞர்களை தெரிவு...படம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு இளைஞர் பரிமாற்று வேலை திட்டத்துக்கு இளைஞர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வு இன்று வியாழக்கிழமை 25-01-2018 மாலை மன்னார் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது.
-தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை உதவி பணிப்பாளர் எம்.மஜித் தலைமையில் இடம் பெற்ற நேர்முகத்தேர்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி .பூலோகராஜா , ஆங்கில வள நிலைய அதிகாரி , அமல்ராஜ் தேசிய சம்மேளன பிரதிநிதிகள் ஜோசப் நயன் மற்றும் கலாகரன் ஜசோதரன் மேற்பார்வையில் குறித்த நேர்முக தேர்வு இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களையும் சேர்த்த பல இளைஞர் யுவதிகள் இவ் நேர்முக தேர்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் நேர்முக தேர்வில் தகுதி பெறும் 8 இளைஞர் யுவதிகள் இவ்வருடம் இடம் பெறும் வெளிநாட்டு இளைஞர் பரிமாற்று வேலை திடத்தில் மன்னார் மாவட்த்தை பிரதி நிதித்துவ படுத்தி வெளிநாடு செல்ல தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 2018ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு இளைஞர் பரிமாற்று வேலை திட்டத்துக்கு இளைஞர்களை தெரிவு...படம்
Reviewed by Author
on
January 26, 2018
Rating:
Reviewed by Author
on
January 26, 2018
Rating:




No comments:
Post a Comment