அண்மைய செய்திகள்

recent
-

6000 ஓட்டங்களை கடந்தார் ஸ்மித் -


அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், டெஸ்டில் 6000 ஓட்டங்கள் கடந்த 15 அவுஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
சிட்னியில் நடைபெற்று வரும் கடைசி ஆஷஸ் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று 55 ஓட்டங்கள் எடுத்திருந்த மாலன், இன்று ஸ்டார்க்கின் பந்துவீச்சில் 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து வந்த மொயீன் அலி 30 ஓட்டங்களும், கரான் 39 ஓட்டங்களும் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தனர்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஸ்டூவர்ட் பிராட் 31 ஒட்டங்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி 346 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அவுஸ்திரேலிய அணி சார்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஹேசல்வுட் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில், பான்கிராப்ட் ‘டக்’ அவுட் ஆனார். எனினும், டேவிட் வார்னர் 56 ஓட்டங்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்மித்தும், கவாஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனிடையே ஸ்மித், டெஸ்ட் அரங்கில் 6000 ஓட்டங்கள் கடந்தார். இதன்மூலமாக 6000 ஓட்டங்கள் எடுத்த 15வது என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 44 ஓட்டங்களுடனும், கவாஜா 91 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.<
6000 ஓட்டங்களை கடந்தார் ஸ்மித் - Reviewed by Author on January 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.