கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி -
தனமல்வில – வெல்லவாய பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகி உள்ளனர்.
விபத்து காரணமாக மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனமல்விலவில் இருந்து வெல்லவாயவை நோக்கி பயணித்த மோட்டார் வாகனமும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலம் தனமல்வில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி -
Reviewed by Author
on
January 27, 2018
Rating:

No comments:
Post a Comment