தினமும் மீன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? -
புரதம், வைட்டமின் டி , கால்சியம், பாஸ்போரஸ் போன்றவை மீனில் அதிகம் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஆகும்.
இரும்பு, ஜின்க், ஐயோடின், மெக்னீசியம், பொட்டஷியம் போன்ற மினரல்கள் மீனில் அதிகம் காணப்படுகின்றன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக விளங்குவது மீன். உடலை ஒல்லியாக வைக்க இந்த சத்து பெரிதும் உதவுகிறது.
மீனை தொடர்ந்து சாப்பிடுவதால், பல நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் கட்டுப்படுகின்றன.
தினமும் மீன் சாப்பிடுவதால், இரத்தக் குழாய் மற்றும் இதயம் சார்ந்த நோய் அபாயங்கள் குறைகின்றன.
மூளை சீராக செயலாற்ற, மீன் உணவுகள் பெருமளவில் உதவுகின்றன. இதனால், அல்சைமர் நோய்க்கு, மீன் சாபிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.
மனச்சோர்விற்கான அறிகுறியை உணர்பவர்கள், மீனை சாப்பிடலாம். மீன் அல்லது மீன் எண்ணெய், மனச்சோர்வின் அறிகுறியை குறைத்து சீரான மன நிலையை தருகிறது. இதனால் மன ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கண் பார்வையை அதிகரித்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நீண்ட நேரம் தூக்கம் வராமல் தவித்து கொண்டிருப்பவர்கள், மீனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
மீனை அதிகம் உட்கொள்பவர்கள், நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற்றிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
மாதவிடாய்க்கு முந்தய அறிகுறிகளான, குமட்டல், வாந்தி, தலைவலி, மன உளைச்சல், உடல் வலி, போன்றவற்றால் அவதி படும் பெண்கள் மீனை தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், அவர்களின் இந்த அறிகுறிகள் குறைவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
தினமும் மீன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? -
Reviewed by Author
on
January 07, 2018
Rating:
Reviewed by Author
on
January 07, 2018
Rating:


No comments:
Post a Comment