கனடாவில் இலங்கை பாரம்பரிய உணவுகளை அசத்தலாக சமைத்த தமிழ் பெண்கள்
இலங்கையில் பிரபலமாக இருக்கும் உணவு வகைகளை அவரின் தாய் அடிக்கடி சிறுவயதில் சமைத்து கொடுத்த நிலையில் தற்போது எதாவது விஷேட தினத்தில் மட்டுமே சமைத்து கொடுக்கிறார்.
இதையடுத்து மறந்து போன இலங்கையின் பாரம்பரிய உணவுகளை மீண்டும் சூப்பாராக சமைக்க வாணி நினைத்தார்.
இந்நிலையில் லாப நோக்கமற்ற இலங்கை - அவுஸ்திரேலியா நிறுவனமான பால்மீரா இலங்கையின் பிரபலமான சமையல் புத்தகம் ஹேண்ட்மேட்-ஐ கடந்த நவம்பரில் கனடாவில் வெளியிட்டது.
இதோடு புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் உணவு வகைகளை ஒரு நிகழ்வாக சமைக்க பால்மீரா இணைய பக்கத்தில் கோரப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த டிசம்பரில் ஒரு ஞாயிற்றுக்கிழமை டொரொண்டோவின் நார்த் யார்கில் உள்ள தனது வீட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ சமையலுக்கு வாணி தயாரானார்.
வாணியும் அவர் மைத்துணி கவிதாவும் இலங்கை கோழி கறி உணவை முதலில் சமைக்க முடிவெடுத்தனர்.
வாணியின் கணவர் கஜன் சமையலுக்கு தேவையான எலும்பில்லாத கோழியை எடுத்து வந்தார். இதோடு அடுத்து சமைக்க வேண்டிய இறால் கறிக்கு தேவையான பொருட்களையும் வாணி தயாராக வைத்திருந்தார்.
வெங்காயம், பூண்டு, மிளகாய், வெந்தய விதைகள், பெருஞ்சீரகம் விதைகள், இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய் பால், சுண்ணாம்பு மற்றும் கறி பொடி ஆகிய பொருட்கள் தயாராக இருந்தன.
அப்போது வீட்டு மணி ஒலிக்க வாணியின் தோழி சுகன்யா மூர்த்தி அங்கு வந்தார். இலங்கையில் பிரபலான பால் இனிப்பு கட்டியை (Milk Toffee) செய்ய தயாராகி அதற்கான வேலையை தொடங்கினார்.
அடுத்ததாக கஸ்தூரி சுகுமார் என்ற பெண் இறால் கறி சமைக்க தேவையான மற்ற பொருட்களுடன் முக்கியமாக புதிய இறால்கள் மற்றும் வீட்டில் செய்த தேங்காய் பாலை எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்தடைந்தார்.
எல்லோருமே தங்களிடம் இருந்த ஹேண்ட்மேட் புத்தகத்தை வைத்தே அதில் சொல்லப்பட்டிருந்த படி சமையல் செய்தார்கள்.
சமையல் உணவுகள் பற்றிமட்டுமில்லாமல் உரல், அரிசியை புடைக்கும் முறம், தேங்காய் மூடியில் செய்யப்பட்ட ஸ்பூன்களை இலங்கையின் பாரம்பரிய வழக்கப்படி எப்படி பயன்படுத்துவது எனவும் சமையல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை சமையலறையில் இதையெல்லாம் பார்க்க முடியாது என வாணி கூறுகிறார்.
இஞ்சியை எல்லாம் அம்மியில் அரைத்தால் தான் அதன் சுவை சரியாக வெளிப்படும் என கூறும் கஸ்தூரி தற்போதெல்லாம் திருமண நிகழ்வின் போது மட்டுமே அம்மியை பார்க்க முடிகிறது என கூறுகிறார்.
அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கை தான் அவர் கூறுகிறார்.
வாணி கூறுகையில் கோழி கறியில் கறி பவுடர் சேர்ப்போம், இது இலங்கையில் ஜாப்னா பவுடர் என அழைக்கப்படும்.
கனடாவின் Scarborough நகரில் இலங்கை பொருட்கள் இருக்கும் மளிகை கடையில் அது கிடைக்கும்.
நான் பத்து வயதில் கனடாவுக்கு வரும் போது இலங்கை உணவுகள் செய்ய தேவையான பொருட்கள் இங்கு கிடைக்காது.
பின்னர் சில காலம் கழித்து கிடைக்க ஆரம்பித்தது. கலிப்போர்னியாவில் இருக்கும் என் சகோதரர் கனடாவுக்கு வரும் போது என் தாய் பனங்கிழங்கில் செய்யப்பட்ட கூழ் செய்து கொடுப்பார் என கூறியுள்ளார்.
இதனிடையில் பெண்கள் எல்லாம் சேர்ந்து சுவையான உணவு வகைகளை பேசி கொண்டே தயார் செய்தார்கள்.
தங்கள் பிள்ளைகளுக்கு அப்படியே புத்தகத்தில் இருப்பதை சொல்லி கொடுத்தார்கள். அந்த சமயத்தில் மேலும் இரண்டு குடும்பங்கள் அங்கு வந்தார்கள்.
அவர்கள் முருங்கைகாய் கறி, கீரை வடை போன்றவற்றை செய்தார்கள். பின்னரும் சிலர் வந்த நிலையில் டைனிங் டேபிளில் சமைக்கப்பட்ட உணவுகள் எல்லாம் பரப்பி வைப்பட்டது.
உணவுகளை எல்லோரும் சாப்பிட்ட பின்னர் சமையல் புத்தகத்தில் இருக்கும் மசாலா டீ-ஐ செய்து குடிப்போம் என மகிழ்ச்சியுடன் வாணி கூறினார்.
கனடாவில் இலங்கை பாரம்பரிய உணவுகளை அசத்தலாக சமைத்த தமிழ் பெண்கள்
Reviewed by Author
on
January 21, 2018
Rating:

No comments:
Post a Comment