அண்மைய செய்திகள்

recent
-

பள்ளி மாணவர்கள் படைத்த சாதனை: விண்ணில் பறக்கும் நானோ செயற்கைகோள்


சீனாவில் முழுக்க முழுக்க பள்ளி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட முதல் நானோ செயற்கைகோள் நாளை மறுதினம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
சீனாவின் வட மேற்கு பிராந்தியத்திலுள்ள ஜியுகுவான் ஏவுதளத்திலிருந்து CZ-11 ராக்கெட்டின் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

மாணவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைகோளுக்கு சீனாவின் முன்னால் தலைவரான ஜொஹு என்லாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கமெரா பொருத்தப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் வானியல் ஆசிரியர் போன்று செயல்படும், இதனைகொண்டு வளிமண்டலத்திற்கு மேலுள்ளவைகளையும் நட்சத்திரங்களையும் புகைப்படம் எடுக்கமுடியும்.
எனவே வானியல் தொடர்பான பல மர்மங்களுக்கு விடை கண்டு வானியல் தொடர்பாக மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளவும் இது உதவியாய் இருக்கும் என்று செயற்கை கோளின் தலைமை வடிவமைப்பளர் ஜாங் சியாங் கூறினார்.

இதுதொடர்பாக மேலும் கூறுகையில், அதிநவீன HD கமெரா பொருத்தப்பட்டுள்ள இந்த நானோ செயற்கைகோளின் உதவியுடன் வான்வெளியில் அதிஉயர்ரக படங்களை எடுக்க முடியும் எனவும், இது அறிவியல் தொடர்பான காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 20 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய இந்த செயற்கைகோளின் எடை 2 கிலோ ஆகும்

இத்திட்டத்திற்கு 2016ல் அனுமதி அளிக்கப்பட்டு The administration office of Huaian Youth Comprehensive Development Base இத்திட்டத்தை ஒருங்கிணைத்தது, இதன் நோக்கம் இளைஞர்களுக்கான மிகப்பெரிய மற்றும் மிகவும் முன்னேறிய வான்வெளி அருங்காட்சியகத்தை அமைப்பதே ஆகும்.
எங்கள் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதை நாங்கள் பார்க்கும் போது நிச்சயம் ஆனந்த கண்ணீர் வரும் என்று சீனாவின் முதல் நானே செயற்கைகோளை உருவாக்கிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் படைத்த சாதனை: விண்ணில் பறக்கும் நானோ செயற்கைகோள் Reviewed by Author on January 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.