மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்வு-படம்
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்கள் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை 29-1-2018 மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய வின் ஏற்பாட்டில், இணைத்தலைவர்கலான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகியோரின் தலைமையில் குறித்த கூட்டம் இடம் பெற்றது.குறித்த கூட்டத்திற்கு இணைத்தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் சமூகமளிக்கவில்லை.
மேலும் குறித்த கூட்டத்திற்கு வடமாகாண அமைச்சர்கலான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,கே.சிவநேசன், அனந்தி சசிதரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கலான பிரிமூஸ் சிறாய்வா, பா.டெனிஸ்வரன், அலிக்கான் சரீப் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தின் கடந்த வருட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மீள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதோடு, நிறைவடையாத வேளைத்திட்டங்களை பூர்த்தி செய்வது குறித்தும் ஆராயப்பட்டது.
-மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
-குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள்,மகப்பேற்று வைத்திய நிபுணர் ஆகியோர் நிரந்தரமாக இல்லாத நிலை காணப்படுகின்றமை குறித்தும் , நிறந்தரமாக அவர்களை நியமிப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் நீர்ப்பாசனம்,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், மீன்பிடி, உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு திணைக்கள அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள் இராணுவ,பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்வு-படம்
Reviewed by Author
on
January 29, 2018
Rating:
No comments:
Post a Comment