அண்மைய செய்திகள்

recent
-

கூந்தல் பிரச்சனைகளுக்கான காரணங்களும் - தீர்வும்


கூந்தல் உதிர்வது, உடைவது, நரைப்பதற்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் முக்கிய காரணம். அவற்றைத் தெரிந்து கொண்டால், உணவின் மூலமே கூந்தல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

கூந்தல் பிரச்சனைகளுக்கான காரணங்களும் - தீர்வும்
சில வகையான வைட்டமின் குறைபாடுகள் கூந்தல் வளர்ச்சி மாற்றத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியவை. அந்த அறிகுறிகள் முதலில் முடி உதிர்வில்தான் தெரியும். பிறகுதான் உடல் அறிகுறிகளில் தெரிய ஆரம்பிக்கும். கூந்தல் உதிர்வது, உடைவது, நரைப்பது என எல்லாவற்றுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள்தான் முக்கிய காரணம். அவற்றைத் தெரிந்து கொண்டால், உணவின் மூலமே கூந்தல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

நம்முடைய கூந்தல் உடையாமலும் ஆரோக்கியமாகவும் இருக்க நிறைய ஊட்டச்சத்துகள் அவசியம். அவற்றில் முக்கியமானது துத்தநாகம். இதில் குறைபாடு ஏற்பட்டால் Premature Hair Loss என்பது ஏற்படும். பொதுவாக இள வயதில் உள்ள கூந்தல் அடர்த்தி, வயதாக, ஆக குறைவது இயல்பு. ஆனால், இள வயதில் கூந்தல் மெலிவது, உடைவது, வழுக்கை விழுவது போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து துத்தநாகக் குறைபாடு இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளலாம்.

நமது கூந்தலின் ஆரோக்கியத்துக்கு இரண்டு விஷயங்கள் நன்றாக இருந்தாலே போதும். ஒன்று ஆக்சிஜன். இன்னொன்று எல்லா ஊட்டச்சத்துகளுடன் கூடிய முறையான ரத்த ஓட்டம். ஆக்சிஜனை ரத்தத்தில் கொண்டு போவது இரும்புச்சத்து. நாம் உயிர் வாழ மட்டுமின்றி, கூந்தல் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையான ஆக்சிஜன் சப்ளை சரியாக இருக்க வேண்டுமானால் இரும்புச்சத்து அதற்கு மிக மிக முக்கியம்.



அசைவம் சாப்பிடுகிறவர்களுக்குத்தான் இரும்புச்சத்து போதுமான அளவு கிடைக்கும் என ஒரு கருத்து நிலவுகிறது.  தாவரங்களில் இருந்து கிடைக்கும் உணவுகளில் அசைவத்துக்கு இணையாக இரும்புச்சத்து கிடைப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. அசைவ உணவுகளின் மூலம் உடலுக்குச் சேர்கிற கொழுப்பானது கொலாஜனை குறையச் செய்துவிடும். அசைவ உணவுகளில் மட்டன், சிக்கன், முட்டை போன்றவற்றுக்கு இது பொருந்தும். மீன் மட்டும் விதிவிலக்கு.

மீனில் கிடைக்கிற ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஃபோலிக் அமிலம் இரண்டுமே கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியவை. எனவே, கொலாஜனை குறைக்காத இரும்புச்சத்து நம் உடலில் சேர வேண்டும் என்றால் தாவர உணவுகளே சிறந்தவை. இவற்றில் முதலிடம் பீட்ரூட்டுக்கு. இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாகவும் கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் நினைப்பவர்கள் தினமும் பச்சையான பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொள்வது நல்லது. இது தவிர வெல்லம், முருங்கைக்கீரை, பசலைக்கீரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இரும்புச்சத்து குறையும் போது முடி மெலிய ஆரம்பிக்கும்.

கூந்தல் பிரச்சனைகளுக்கான காரணங்களும் - தீர்வும் Reviewed by Author on January 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.