இந்தியாவை பின் தள்ளி முன்னிலை பெற்ற இலங்கை! உலக அளவில் நோர்வே முதலிடம் -
மக்களின் வாழ்க்கை தரம், சுற்றுச்சூழலை தாக்குப்பிடிக்கும் தன்மை, எதிர்கால தலைமுறைனரை கடன்களில் இருந்து பாதுகாப்பது உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு, அனைத்து மேம்பாட்டு குறியீடு புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
103 நாடுகளில் வளரும் நாடுகள் பட்டியலில் 74 நாடுகளும், வளர்ந்த நாடுகள் பட்டியலில் 29 நாடுகளும் சேர்க்கப்பட்டு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இலங்கைக்கு 40வது இடம் கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் நோர்வே முதலிடத்தில் இருப்பதுடன், அயர்லாந்து, லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 62வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 79 வளரும் நாடுகளில் எடுக்கப்பட்ட தரவரிசையில் இந்தியா 60வது இடத்திலிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பின் தள்ளி முன்னிலை பெற்ற இலங்கை! உலக அளவில் நோர்வே முதலிடம் -
Reviewed by Author
on
January 23, 2018
Rating:

No comments:
Post a Comment