அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர்களை கெளரவிக்கும் நிகழ்வு...


மன்னார் மறைமாவட்டத்தின்  வரலாற்றுத் தடம்பதித்த மூன்று ஆயர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும், மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான, விழாக்கால ஒன்று கூடலும் 03.01.2018 புதன்கிழமை மாலை 06.30 மணிக்கு மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. விழாக்கால செப வழிபாட்டைத் தொடர்ந்து


மறைமாவட்டதில் பல தாக்கமான பணிகளை அர்பணிப்போடு செய்த ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களை வாழ்த்தியும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக திருத்தூதரக நிர்வாகியாக அர்ப்பணிப்போடு மறைமாவட்டத்திற்குப் பணியாற்றி தான் முன்னர் பணியாற்றிய மறைமாவட்டத்திற்குச் செல்லும் ஆயர் பேரருட் கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், மன்னார் மறைமாவட்டத்திற்கான மூன்றாவது ஆயராகப் பணிப் பொறுப்பேற்றுள்ள ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை வரவேற்றும் இந் நிகழ்வு இடம் பெற்றது.

முதலில் மூன்று ஆயர்களும் மாலையும் பொன்னாடையும் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.


கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக திருத்தூதரக நிர்வாகியாக அர்ப்பணிப்போடு மறைமாவட்டத்திற்குப் பணியாற்றி தான் முன்னர் பணியாற்றிய மறை மாவட்டத்திற்குச் செல்லும் ஆயர் பேரருட் கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களுக்கு நன்றி தெரிவித்து அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேரருட் கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் தனது நன்றியுணர்வினையும், மறைமாவட்டத்தில் தான் பெற்ற மறக்கமுடியாத நல் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

புதிய ஆயர் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் அருட்பணியாளர்களுக்கான திருவிழாக்காலச் செய்தியை வழங்கினார்.  அருட்பணியாளர்களுக்கு திருவிழாக்கால மகிழ்வுப் பொதிகளை பரிமாறினார்.
 















மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர்களை கெளரவிக்கும் நிகழ்வு... Reviewed by Author on January 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.