மன்னார் மக்களின் கர்ப்பிணித்தாய்மார்கள் தொடரும் அவலநிலை.....
மன்னார் பொதுவத்தியசாலையின் இருக்கின்ற பிரச்சினைகளில் இப்போது தலைதூக்கியுள்ள இருக்கின்ற பிரச்சினைகளில் நோயாள்ர்களினதும் கிளினிக்வரும் நோயாள்ர்கள் அத்தோடு குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்கள் திருப்பியனுப்பப்படுகின்றார்கள் மருந்து கொடுக்கவோ.... பரிசோதிக்கவோ....மருத்துவர்களும் இல்லை மகப்பேற்று நிபுணர்கள் இல்லை....
யாழ்ப்பாண வைத்திய சாலைக்கும் வவுனியா பொதுவைத்திய சாலைக்கு அனுப்பபடுகின்றார்கள் (அம்புலண்ஸ் வாகனத்தில் குழந்தைகள் பிறந்தது யாவரும் அறிந்த விடையமே)
கடந்த மாதம் பாரிய ஆர்ப்பாட்டம் வீதியில் நின்று செய்த கர்ப்பிணித்தாய்மார்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியானது வவுனியா வைத்தியசாலையில் இருந்து மகப்பேற்று நிபுணர்கள் தவணைமுறையில் கடமைபுரிவார்கள் என்றும் அத்தோடு வடமாகண முதலமைச்சருக்கு தெரியப்படுத்தியும் எந்தப்பலனும் இல்லை
அதேபோல் மன்னார் பொதுவத்தியசாலை அபிவிருத்திக்குழு ஊடாக கடிதம் சுகாதார அமைச்சருக்கு அனுப்பியும் எந்தப்பலனும் இல்லை அப்படியானால் பாதிக்கப்படுகின்ற மக்களின் நோயாளிகளின் குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்கள் குழந்தைகள் அவசரசிகிச்சைக்காக வருபவர்களின் நிலையினை எண்ணிப்பாருங்கள்என்ன தீர்வு......
மக்களின் உயிருக்கு.....!!!!!
மன்னார் மாவட்டத்தினை பொறுத்தமட்டில் மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற அமைச்சர் வடமாகண முதலமைச்சர் வடமாகாண் சுகாதார அமைச்சர் எதிர்கட்ச்சித்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகண சபை உறுப்பினர்கள் எனப்பலரும் அதிகாரத்தில் இருந்தும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளைக்குகூட செய்யமுடியாத நிலையில் இருக்கின்றார்கள்
என்னதான் இவர்கள் மக்களுக்கு செய்யப்போகின்றார்கள்.
இறந்த பின்பு கண்ணீர் அஞ்சலி செலுத்தவா.....
தேர்தல்காலங்களில் மட்டும் முகம் காட்டும் எமது பிரதிநிதிகளே...நாங்கள் உங்களிடம் சொகுசு வாழ்க்கை வசதிகள் கேட்கவில்லை அடிப்படை உரிமைகள் தான் கேட்கின்றோம் அதைக்கூட உங்களால் செய்துதரமுடியவில்லை என்றால்.....?
பிறகு ஏன் நீங்கள்.....???
மன்னார் மக்களின் கர்ப்பிணித்தாய்மார்கள் தொடரும் அவலநிலை.....
Reviewed by Author
on
January 30, 2018
Rating:
Reviewed by Author
on
January 30, 2018
Rating:


No comments:
Post a Comment