உலகையே அச்சுறுத்தும் வடகொரிய ஜனாதிபதியை பற்றி அமெரிக்க மக்கள் கவலை: ஏன் தெரியுமா? -
அதுமட்டுமின்றி அமெரிக்காவை அழிக்கும் பட்டன், என் மேஜை மீது தான் உள்ளது என்று வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் புத்தாண்டு உரையில் தெரிவித்திருந்தார்.
அதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதை விட பெரிய பட்டன் தன்னிடம் இருப்பதாக கூறி எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் சில நாட்கள் வார்த்தைப் போர் இல்லாமல் இருந்த இருவருக்கும் தற்போது வார்த்தைப் போர் நிலவியுள்ளது.
இது கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் பதற்றத்தை உருவாகியுள்ளது. இதற்கிடையில் தென் கொரியா மற்றும் வடகொரியாவிற்கும் இடையே தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் தொடர் குறித்து பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், சாரா சாண்டர்ஸ், வடகொரிய ஜனாதிபதியின் மனநலம் குறித்து அமெரிக்க ஜனாதிபதியும், மக்களும் கவலைப்படுகின்றனர்.
ஏனெனில், தொடர்ந்து அவர் அச்சுறுத்தலில் ஈடுபட்டு வருகிறார். பல ஆண்டுகளாக ஏவுகணை சோதனைகளை மீண்டும் மீண்டும் நடத்தி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தும் வடகொரிய ஜனாதிபதியை பற்றி அமெரிக்க மக்கள் கவலை: ஏன் தெரியுமா? -
Reviewed by Author
on
January 05, 2018
Rating:
No comments:
Post a Comment