தைப்பொங்கல் திருநாள்....பொங்கலோ...பொங்கல்....
தமிழர் திருநாள்
தங்கப் பெருநாள்
தரணியெங்கும் பொங்கும் நாள்
தைப்பொங்கல் திருநாள்
உயர்வுக்காய்-தினம்
உழைக்கும் வர்க்கம்
உண்மையுணர்ந்த உலா
உழவர் திருவிழா
போகி-பழையன கழித்தல்
பொங்கல்- நன்றிப்படையல்
பட்டிப்பொங்கல்-ஆவினத்துக்காய்
காணும் பொங்கல்-உறவினர்களுக்காய்-என
நான்கு நாளும்-நன்குணர்ந்து
நம்முன்னோர் வகுத்து
நல்விதமாய்-இதமாய்
நன்றித்திரு விழா நானிலம் போற்றும் பெருவிழா
பூவுலகமே இணைந்து
புத்தாடை புணைந்து
பூக்கோலம் வணைந்து
புதுப்பாணையிலே....
செவ்வாழை மாவிலை தோரணமும்
செங்கரும்பு கட்டி
செந்நிறமாய் அரிசியும் பாலும் சர்க்கரையும்...
செங்கதிரோனை பார்க்க பொங்கி வரும் வேளை
பொங்கலோ...பொங்கல்
பொங்கலோ ...பொங்கல்
தைப்பொங்கல்-புதிய கதை
தைரியம் தரும் பொங்கல்.....
உலக உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உள்ளங்களில் உற்சாகம் பொங்கட்டும்......
கவிஞர்-வை-கஜேந்திரன்
தைப்பொங்கல் திருநாள்....பொங்கலோ...பொங்கல்....
Reviewed by Author
on
January 13, 2018
Rating:

No comments:
Post a Comment