ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாடு மாறும் வியக்க வைக்கும் தீவு: வெளியான ஆச்சரிய தகவல் -
குறித்த நிலப்பகுதியை 6 மாத கால ஆளுமைக்கு பின்னர் ஸ்பெயின் பிரான்ஸ் நாட்டிடமும் திரும்ப ஒப்படைக்கும்.
பிரான்சின் புகழ்பெற்ற கடற்கரையான Hendaye என்ற நகரந்தான் ஸ்பெயின் எல்லை அருகே இருக்கும் கடைசி நகரம்.
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் இடையே இயற்கையான எல்லையாக Bidassoa நதி உள்ளது.
இரண்டு நாடுகளைப் பிரித்து இந்த நதி பாய்ந்தோடுகிறது. Bidassoa நதியின் நடுவே, Faisans என்ற தீவு அமைதியாகவும், மரங்களால் சூழப்பட்டும் இருக்கிறது.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே நடந்த நீண்ட கால போரை முடிவுக்குக் கொண்டுவர, இந்த Faisans தீவில் தான் 1659-ஆம் ஆண்டு இரண்டு நாடுகளும் மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தின.
அப்போது இந்தத் தீவு நடுநிலை மண்டலமாக இருந்தது. இந்த நிலையில் இரு நாடுகளும் மேற்கொண்ட ஒப்பத்தத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு முதல் 6 மாதங்கள் இரு நாடுகளில் ஒன்றின் ஆளுமையின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
தற்போது ஸ்பெயின் நாட்டின் ஆளுமையில் உள்ள இந்த Faisans தீவானது எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் யூலை 31 ஆம் திகதி வரை பிரான்ஸ் ஆளுமையில் இருக்கும்.
ஸ்பெயினின் கடற்படை தளபதிகளில் ஒருவரே குறித்த தீவுக்கு ஆளுநராக செயல்படுவார்.
மட்டுமின்றி ஆண்டுக்கு ஒருமுறை ஒரு குழுவினரை அனுப்பி இங்குள்ள பராமரிப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யப்படுகிறது.
200 மீற்றர் நீளமும் 40 மீற்றர் அகலமும் கொண்ட இந்த Faisans தீவானது பெரும்பாலும் முதியவர்கள் மட்டுமே பார்வையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாடு மாறும் வியக்க வைக்கும் தீவு: வெளியான ஆச்சரிய தகவல் -
Reviewed by Author
on
January 29, 2018
Rating:
No comments:
Post a Comment