தமிழ் மக்களுக்கு இரா.சம்பந்தன் இன்று வழங்கிய உறுதி மொழி!
எமது மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வை தாம் ஒரு போதும் ஆதரிக்க போவதில்லை என்பதை உறுதியுடன் கூறிக்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் கூடிய விரைவில் ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு நாம் கடும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று மாலை இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ஒருமித்த நாட்டிற்குள் போதிய சுயாட்சியை பெற்று, எமது உரிமையை அனுபவிப்பதற்கு நீண்டகாலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் ஒரு சுயாட்சி கோட்பாட்டையே நாங்கள் கோரியிருக்கின்றோம்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.
“மீண்டும் ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரப்போகின்றார்களா? அல்லது இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க செய்ய போகின்றார்களா?
அத்துடன், தமிழ் மக்கள் எந்த விதத்தில் வாக்களிக்க போகின்றார்கள் என்பதை சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், எமது மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வை தாம் ஒரு போதும் ஆதரிக்க போவதில்லை என்பதை உறுதியுடன் கூறிக்கொள்வதாக இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு இரா.சம்பந்தன் இன்று வழங்கிய உறுதி மொழி!
Reviewed by Author
on
January 30, 2018
Rating:

No comments:
Post a Comment