வவுனியா நகரில் இரு வர்த்தக நிலையங்களில் இருந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட புகையிலை மதுவரி திணைக்களத்தினரால்...
வவுனியா நகரில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் இருந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட புகையிலை மதுவரி திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இரு வர்த்தக நிலையங்களிலும் இன்று காலை
சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, இரு வர்த்தக நிலையங்களிலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 14 இலட்சம் பெறுமதியான புகையிலை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த உற்பத்தி பொருளை விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மதுவரி திணைக்கள் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், புகையிலையை உற்பத்தி செய்யும் நபர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த உற்பத்தி பொருட்கள் இலங்கையில் பிரபல புகையிலை தயாரிப்பு நிறுவனத்தின் சின்னங்கள் மற்றும் பெயரை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா நகரில் இரு வர்த்தக நிலையங்களில் இருந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட புகையிலை மதுவரி திணைக்களத்தினரால்...
Reviewed by Author
on
January 04, 2018
Rating:

No comments:
Post a Comment