வடக்கில் மனித உரிமை ஆணைக்குழுவில் 1944 முறைப்பாடுகள் -
வடக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில், வட மாகாணத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1944 முறைப்பாடுகள் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு மனித உரிமை ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
நாளொன்றுக்கு 100க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற போதிலும் சில முறைப்பாடுகள் உடனடியாகவே தீர்க்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு யாழ். பிராந்திய அலுவலகத்தில் 315 முறைப்பாடுகளும், கிளிநொச்சி உப அலுவலகத்தில் 93 முறைப்பாடுகளும், வவுனியா பிராந்திய அலுவலகத்தில் 284 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு யாழ். பிராந்திய அலுவலகத்தில் 219 முறைப்பாடுகளும், கிளிநொச்சி உப அலுவலகத்தில் 129 முறைப்பாடுகளும், வவுனியா பிராந்திய அலுவலகத்தில் 315 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை யாழ். பிராந்திய அலுவலகத்தில் 188 முறைப்பாடுகளும், கிளிநொச்சி உப அலுவலகத்தில் 73 முறைப்பாடுகளும், வவுனியா பிராந்திய அலுவலகத்தில் 256 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக 2015ஆம் ஆண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் 27 முறைப்பாடுகளும், பலவந்தமாக கைது செய்யப்பட்டமை தொடர்பில் 27 முறைப்பாடுகளும், காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் 22 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, 2016ஆம் ஆண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் 85 முறைப்பாடுகளும், பலவந்தமாக கைது செய்யப்பட்டமை தொடர்பில் 52 முறைப்பாடுகளும், காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பில் 20 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் வரை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் 55 முறைப்பாடுகளும், பலவந்தமாக கைது செய்யப்பட்டமை தொடர்பில் 25 முறைப்பாடுகளும், காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் 20 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வடக்கில் மனித உரிமை ஆணைக்குழுவில் 1944 முறைப்பாடுகள் -
Reviewed by Author
on
February 16, 2018
Rating:

No comments:
Post a Comment