இலங்கை வாழ் மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு உயர்வு -
இந்த ஆய்வினை சனத்தொகை மற்றும் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
குறித்த ஆய்வின் அடிப்படையில் சாதாரண மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவானது 55 ஆயிரம் ரூபாவிற்கு மேல் உயர்வடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அந்த வகையில் நகரப் புறங்களில் வாழும் மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 77 ஆயிரத்து 337 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கிராமிய மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 51 ஆயிரத்து 377 ரூபா வரையிலான தொகையாக காணப்படுகிறது.
மேலும், தோட்டப்புற மக்களின் வாழ்க்கைச் செலவு 34 ஆயிரத்து 851 ரூபா வரையிலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வாழ் மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு உயர்வு -
Reviewed by Author
on
February 16, 2018
Rating:

No comments:
Post a Comment