வவுனியாவில் 348 நாட்களாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 348 நாட்களை எட்டியுள்ள நிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்கள் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர் .
பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்கள் வீதிகளில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் நிலையில் நேற்றைய முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை அவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நஸ்ட ஈடு பெறுவதற்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை கடந்த ஒரு வருட காலமாக உங்கள் பிள்ளைகளை விடுதலை செய்வோம் என தெரிவித்த அரசாங்கம் இப்போது காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் இல்லை என தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதியுடன் எமது பிள்ளைகள் நிற்கும் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது.
நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது ஏன் எமது பிள்ளைகள் இல்லை என ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.
எங்கள் காணாமல் போன ஒரு பிள்ளைக்காக எமது மற்றைய பிள்ளைகளையும் கைவிட்டு ஒரு வருடமாக தெருவிலே போராட்டம் செய்து வருகிறோம். வவுனியாவிற்கு வந்த ஜனாதிபதி போராட்டம் நடத்தும் தாய்மாரை சந்திக்கவில்லை . மகிந்த அரசின் காலத்தில் எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டது என்றால் அந்த அரசில் சுகாதார அமைச்சராக மைத்திரி இருந்துள்ளார். ஆகவே மகிந்தவிடம் விசாரணையை மேற்கொள்ளுங்கள். எங்கள் பிள்ளைகள் எந்த சிறையில் இருந்து கண்ணீர் வடிக்கிறார்களோ தெரியவில்லை.
ஜனாதிபதியின் நஸ்ட ஈட்டுக்கு எமது பிள்ளைகளை நாங்கள் விற்கமாட்டோம். எமது மக்கள் பிரதிநிதிகள் துரோகிகள் அவர்கள் எங்கள் பிரச்சனையை தட்டிக்கேட்க முடியாத பாராளுமன்ற உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள்.
எங்கள் பிள்ளைகள் இல்லை என சொல்ல வேண்டாம் முப்படையினரும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார்கள் அவர்களை உடனடியாக விசாரணை செய்யுங்கள். எமது பிரச்சனையில் சர்வதேசம் தலையிடவேண்டும். அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கையில்லை எங்களை இலங்கை அரசு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. எங்கள் பிள்ளைகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Reviewed by Author
on
February 07, 2018
Rating:

No comments:
Post a Comment