ஒரே தொடரில் ஐ.சி.சி தரவரிசையில் உச்சம் தொட்டு சாதனை படைத்த அவுஸ்திரேலியா -
முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வென்று தொடரை கைப்பற்றியதால் ஒரே தொடரில் ஐசிசி தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருந்து நம்பர் 1 இடத்திற்கு அவுஸ்திரேலியா முன்னேறியுள்ளது.
நியூசிலாந்தில் நடைப்பெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்றன.
இன்று நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் நாணய சுழற்சியில் வென்று வென்ற முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலியா 14.4 ஓவரில் 121 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. வெகு நேரம் மழை பெய்ததால் டக்வொர்த் லெவிஸ் முறைப்படி அவுஸ்திரேலியா 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் ஒரே தொடரில் கடைசி இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறி அவுஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது. அவுஸ்திரேலியா முதன் முதலாக ஐ.சி.சி T20 தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுமே ஐ.சி.சி T20 தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே தொடரில் ஐ.சி.சி தரவரிசையில் உச்சம் தொட்டு சாதனை படைத்த அவுஸ்திரேலியா -
Reviewed by Author
on
February 22, 2018
Rating:
Reviewed by Author
on
February 22, 2018
Rating:


No comments:
Post a Comment