அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் பா உ நீர்ப்பாசன அமைச்சருடன் அவசர சந்திப்பு


மன்னார் மாவட்ட விவசாயிகள் கடும் வரட்சியின் காரணமாக பயிர்கள் சேதமடைவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை நீர்ப்பாசன அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாகவும்,கட்டுக்கரை குளத்தில் நீரின் மட்டம் குறைவடைந்துள்ளமையினாலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய செய்கை பாதீப்படைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய அமைப்பு மற்றும் வாய்க்கால் அமைப்பு ஆகியவற்றினூடாக அண்மையில் ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைத்தனர்.

எனினும் விவசாயிகளுக்கு இது வரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை  சந்தித்து தமது பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினர்.

குறிப்பாக நாச்சியாத்தீவு குளத்தில் இருந்து நீர்ப்பாசன வசதிகள் செய்து  தரப்பட்டால் தங்கள் பயிர்கள் காப்பாற்றப்படும் எனவும் சுமார் 7 ஆயிரம்ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் காப்பாற்றப்படும் எனவும் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காப்பாற்றப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நீர்ப்பாசன அமைச்சரை சந்தித்து மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினார்.

குறிப்பாக விவசாயிகளின் இக்கட்டான நிலையினை அமைச்சருக்கு எடுத்துக்கூறி அவசரமாக நாச்சியாத்தீவு குளத்தில் இருந்து நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீர்ப்பாசன அமைச்சர் உரிய  அதிகாரிகளுடன் அவசர சந்திப்பை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அமைச்சர்  உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் பா உ நீர்ப்பாசன அமைச்சருடன் அவசர சந்திப்பு Reviewed by Author on February 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.