மகிழ்ச்சியான வாழ்விற்கு எவ்வளவு பணம் தேவை? ஆய்வு தகவல் -
அதிலும் போதுமான அளவு பணம் இல்லாவிட்டால் மேலதிக பணத்தை தேடி சந்தோசத்தை தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருவரின் வாழ்வில் சந்தோசமாக இருப்பதற்கு எவ்வளவு பணம் தேவை என்பது தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது 164 நாடுகளைச் சேர்ந்த 1.7 மில்லியன் மக்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 95,000 டொலர்கள் பணத்தினைக் கொண்டிருக்கும் ஒருவர் தனது வாழ்வில் திருப்தியடைய முடியும் என அறியப்பட்டுள்ளது.
தவிர 60,000 - 75,000 டொலர்கள் வரை வைத்திருப்பவர்கள் அன்றாட நடவடிக்கைகளைப் பொறுத்தே சந்தோசமாக இருக்க முடியும் என இந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதோபோன்று வாழ்க்கையில் திருப்திகொள்ள அவுஸ்திரேலியாவில் 125,000 டொலர்களும், வட அமெரிக்காவில் 105,000 டொலர்களும், மேற்கு ஐரோப்பாவில் 100,000 டொலர்களும், தென்கிழக்கு ஆசியாவில் 70,000 டொலர்களும், கிழக்கு ஐரோப்பாவில் 40,000 டொலர்களும், லத்தீன் அமெரிக்காவில் 35,000 டொலர்களும் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியான வாழ்விற்கு எவ்வளவு பணம் தேவை? ஆய்வு தகவல் -
Reviewed by Author
on
February 17, 2018
Rating:

No comments:
Post a Comment