உள்ளூராட்சி தேர்தலின் முடிவு தாயகத் தமிழர்கள் வழங்கும் தீர்ப்பாகும் -
இந்த விடயம் தொடர்பில், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆயுதம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் சூனியமாக்கப்பட்டுள்ளதாகவும், தாயக அரசியல் வெளியை மீட்டெடுக்கும் களமாக இத்தேர்தல் களத்தை நாம் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவின் பூர்வீகக்குடிகளாக வாழ்ந்து வரும் தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் மீதான எமது உரித்தை நிலைநிறுத்தும் உன்னத நோக்கத்திற்காகவே பல்லாயிரக் கணக்கிலான மாவீரர்கள் தமது இன்னுயிரை தியாம் செய்தனர்.
குறித்த இலட்சியம் நோக்கிய பயணத்தில்தான் இலட்சக்கணக்கிலான தமிழ்மக்களும் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.
ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக வாக்களித்தே ஆகவேண்டியது இன்றியமையாதது ஆகும். இவ்விடத்தில் தான் அவ்வாறு செலுத்தும் வாக்கை யாருக்கு செலுத்துவது என்பது குறித்து தீர்க்கமான முடிவெடுக்க வேண்டியுள்ளதாகவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலின் முடிவு தாயகத் தமிழர்கள் வழங்கும் தீர்ப்பாகும் -
Reviewed by Author
on
February 01, 2018
Rating:

No comments:
Post a Comment