உங்க நகம் எப்படியிருக்கு? நோய்களை கண்டறியலாம் -
நகத்திற்கு பாலிஷ் செய்து, சுத்தமாக பராமரித்து வடிவில் வைத்து அழகு பார்ப்பது பெண்களுக்கே உரிய குணம் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட நகங்கள் உடைவதை தடுக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காண்பது குறித்து இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும். மேலும் தைராய்டு பிரச்சனைகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளைக் குறிக்கும் அடையாளமாகவும் இருக்கலாம் என்றும் சில மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதற்கான காரணங்களை கீழ் உள்ள குறிப்பில் தெரிந்து கொள்வோம்.
அடிக்கடி நெயில் பாலிஷ் பயன்படுத்துவது, துணிகளைத் துவைக்கும்போது கடினமான டிடர்ஜென்ட் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்துவதால் நகங்கள் பாதிப்படையும்.
அதிகமான ஈரப்பதத்தால் எளிதில் உரிந்து உடைய வாய்ப்புள்ளது. வேதிப்பொருள்கள் நிறைந்த நெயில் பாலிஷ் ரிமூவர் (அசிட்டோன்) போன்றவற்றை உபயோகப்படுத்துவதால், நகங்கள் பாதிப்படையும். இரும்புச்சத்துப் பற்றாக்குறை, உடலில் உள்ள ஏதேனும் நோய் அல்லது தொற்று நோய் போன்ற காரணங்களால் நகங்கள் பாதிப்படையும்.
தைராய்டு பிரச்சனை, குறை பிட்யூட்டரி செயல்பாடு, நீரிழிவுநோய், ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோமலாசியா போன்ற நாளமிலா சுரப்பு கோளாறுகலும் இதில் அடங்கும்.
இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பது எப்படியென்று பார்க்கையில், பாத்திரங்கள் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்யும் போது இரப்பரால் ஆன கையுறைகளை அணிந்துகொள்ளலாம். சோப்பு அல்லது டிடர்ஜென்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது குறைந்த அளவே பயன்படுத்தவும். இதனால் அவற்றால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கலாம்.
லோஷன் அல்லது மென்மையான கிரீமை நகங்கள் மற்றும் விரல் முனைகளில் தேய்த்துக்கொள்வது நகங்களுக்கு நன்மை சேர்க்கும். நகங்களின் முனைகளின் வடிவத்தை சீராக்க, உலோகமல்லாத உபகரணத்தைப் பயன்படுத்தவும்.
உங்க நகம் எப்படியிருக்கு? நோய்களை கண்டறியலாம் -
Reviewed by Author
on
February 05, 2018
Rating:

No comments:
Post a Comment