அண்மைய செய்திகள்

recent
-

விடுதலைப்புலிகளை பல நாடுகள் இணைந்து எப்படி அழித்ததோ,அதே பேன்று இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினை-சாள்ஸ் நிர்மலநான் எம்.பி.(PHOTOS)


விடுதலைப்புலிகளை பல நாடுகள் இணைந்து எப்படி அழித்ததோ,அதே பேன்று இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினை பல கட்சிகள்  இணைந்து அழிப்பதற்கு ஒன்று சேர்ந்துள்ளனர்-சாள்ஸ் நிர்மலநான் எம்.பி


நாங்கள் நேசித்த,நேசித்துக் கொண்டிருக்கின்ற தலைவர் பிரபாகரனேயே அமைச்சர் றிஸாட் பதியுதீன்   பயங்கரவாதிகளின் தலைவர் என்று கூறுகின்றார்.

பயங்கரவாதிகளின் தலைவர் என்று கூறும் அமைச்சர் றிஸாட் பதியூதினுக்கு நீங்கள் வாக்கு போட்டால் அவர் கூறிய விடையம் உண்மையா?என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார்.

மன்னார் பெரியகமம் பகுதியில் நேற்று(4) மாலை இடம் பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,

-எங்களை அறியாமலே நாங்கள் பிழை விடுகின்றோம்.நீங்கள் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை.எல்லாம் சரியாக நடக்கும்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்த காலத்தில் இருந்து இன்று வரை மன்னார் மாவட்டத்திற்கு எவ்வளவே செய்துள்ளேன்.

எனவே என்னை நம்பி நீங்கள் வீட்டிற்கு வாக்களியுங்கள்.சரியான முறையில் தேசியத்திற்காக உழைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

-எங்களுடைய மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னோக்கிச் செல்லவதற்காக நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

-உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் நான் தான் வர வேண்டும்.வேறு யாரும் வரமாட்டார்கள்.வருவதற்கு யாரும் இல்லை.தேர்தல் காலத்தில் வருவார்கள்.ரணிலும் வருவார், மைத்திரியும் வருவார், ஜே.வி.பி.யினரும் வருவார்கள்.

அவர்களும் வந்து கூறுவார்கள் தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு ஒன்றையும் கதைக்கவில்லை என்று.

-இன்று விடுதலைப்புலிகளை எப்படி பல நாடுகள் இணைந்து அழித்ததோ,அதே பேன்று பல கட்சிகள் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினை அழிப்பதற்கு ஒன்று சேர்ந்துள்ளனர்.

எனவே தேசிய தலைவரினால் உருவாக்கப்பட்டுள்ள கட்சியை எக்காலத்திலும் அழிவடைவதற்கு நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன்.

-வடக்கு கிழக்கை இணைத்து எமது மக்களினுடைய உரிமையை வென்றெடுக்கும் வரைக்கும் , அதற்கு பின்னரும் இக்கட்சி தொடரும்.

மக்கள் சேவை தொடரும் . மக்கள் அனைவரும் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை மட்டும் தான் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற செய்தியை தெரிவிப்பதற்கு ஜனநாயக வாக்குரிமையை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்-என அவர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளை பல நாடுகள் இணைந்து எப்படி அழித்ததோ,அதே பேன்று இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினை-சாள்ஸ் நிர்மலநான் எம்.பி.(PHOTOS) Reviewed by Author on February 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.