உலகின் மிகப்பெரிய மூளைக் கட்டி -வெற்றிகரமாக நீக்கப்பட்டது
இவரது கட்டியானது வழமைக்கு மாறாக மிகவும் இராட்சத உருவத்தில் காணப்பட்டுள்ளது.
இருந்தும் வெற்றிகரமாக சத்திரசிகிச்சையின் ஊடாக இந்திய மருத்துவர்கள் இவரது மூளைக் கட்டியினை நீக்கியுள்ளனர்.
மருத்துவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் இவரின் மூளைக் கட்டியானது 1.8 கிலோ கிராம்கள் வரை காணப்பட்டதாகவும் 20x30x30 cm அளவுடையதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இதுவே உலகின் மிகப்பெரிய மூளைக் கட்டியாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
31 வயதான போலின் குறித்த கட்டியானது காதலர் தினத்தன்று சுமார் ஆறு மணிநேர சத்திரசிகிச்சையின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்த போலின் மனைவி உத்திர பிரதேசத்தில் உள்ள பல வைத்தியர்களை நாடிய போதிலும் இவ் வகையான கட்டியை சத்திரசிகிச்சை மூலம் நீக்க முடியாது என கூறியதாத குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய மூளைக் கட்டி -வெற்றிகரமாக நீக்கப்பட்டது
Reviewed by Author
on
February 25, 2018
Rating:
No comments:
Post a Comment