இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்! தமிழக மீனவர்கள் போராட்டம் -
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எல்லை தாண்டு தமிழக மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் எல்லை தாண்டும் மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ஐம்பது லட்சம் முதல் 7 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
இதற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க துணை தலைவர் ராமதேவன் கருத்து தெரிவிக்கையில்,
“தற்போது மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழிலில் போதிய வருமானமின்றி பின் தங்கி இருக்கிறோம். இலங்கை அரசு எல்லைதாண்டி மீன்பிடித்தால் படகுகளுக்கு 50 லட்சம் முதல் 7 கோடிவரை அபராதம் என்ற சட்டம் இயற்றியுள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் தற்போது டீசல் விலையை உயர்த்தியுள்ளனர்.
அதனால் மத்திய மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கையில் உள்ள படகு மற்றும் மீனவர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
புதிய சட்டமாக படகு பறிமுதல் செய்தால் அபராத தொகை அறிவித்துள்ள இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்! தமிழக மீனவர்கள் போராட்டம் -
Reviewed by Author
on
February 02, 2018
Rating:

No comments:
Post a Comment