அண்மைய செய்திகள்

recent
-

முரளிதரனை நினைவுப்படுத்துகிறார்: இலங்கை வீரருக்கு கிடைத்த பாராட்டு -


இலங்கை வலது கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்செயாவை பார்த்தால் இளம் வயது முத்தையா முரளிதரன் ஞாபகம் வருகிறது என பயிற்சியாளர் சந்திகா ஹத்ருசிங்கா கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஹத்ருசிங்கா தெரிவான பின்னர் அணியின் செயல்பாட்டில் நல்ல மாற்றம் தெரிகிறது.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை தற்போது தொடர் வெற்றிகளை சுவைத்து வருகிறது.
இது குறித்து பேசிய ஹத்ருசிங்கா, வங்கதேச தொடரை இலங்கை வென்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, ஆனால் சிறிது கால இடைவெளியில் அணியினர் காட்டிய முன்னேற்றத்தால் ஆச்சரியப்பட்டேன்.

நமது பலம் என்ன என்பதை அடையாளம் காணவும், களத்தில் யதார்த்தமாக இருக்கவுமே முயன்று வருகிறோம்.
அகில தனஞ்செயாவை பற்றி கேட்கிறீர்கள், அவர் எனக்கு இளம் வயது முத்தையா முரளிதரனை நினைவுப்படுத்துகிறார்.
அவரது சுழல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏதுவாக இருக்கிறது.
அவர் பந்து வீசும் முறை மற்றும் வேகம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரியாக பொருந்துகிறது என கூறியுள்ளார்.


முரளிதரனை நினைவுப்படுத்துகிறார்: இலங்கை வீரருக்கு கிடைத்த பாராட்டு - Reviewed by Author on February 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.