அமெரிக்கா சாதனை....குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை:
அமெரிக்காவில் ஆபரேசன் எதுவுமின்றி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து திருநங்கை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த திருநங்கை ஒருவர் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றார். ஆனால் அக்குழந்தைக்கு வாடகைத் தாய் தாய்ப்பால் கொடுக்க மறுத்து விட்டார்.
எனவே, திருநங்கை தானே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வருகிறார். திருநங்கை ஒருவர் குழந்தைக்கு எப்படி தாய்ப் பால் கொடுக்க முடியும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. டாக்டர்களின் தீவிர முயற்சிக்கு பிறகு இது சாத்தியமானது.
அதற்காக திருநங்கைக்கு ஆபரேசன் எதுவும் செய்யவில்லை. மவுன்ட் சினாய் பார் டிரான்ஸ் ஜென்டர் ஆஸ்பத்திரியில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஹார்மோனை மாற்றக்கூடிய மருத்துவ முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. கனடாவில் இருந்தபடியே டாக்டர்கள் இதை செய்துள்ளனர்.
குழந்தை பிறப்பதற்கு 5 மாதத்துக்கு முன்பே இம்மருத்துவ முறை மூலம் பால் சுரக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்போது இவர் ஒரு நாளுக்கு 8 அவுன்ஸ் தாய்ப்பால் உற்பத்தி செய்து குழந்தைக்கு புகட்டி வருகிறார்.
இதன் மூலம் இவர் இன்னும் 6 மாதத்திற்கு பால் கொடுக்க முடியும். அதன் பின் சரியான உணவு முறைகள் மூலம் மேலும் கொடுக்க வழிவகை செய்யலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
ஆபரேசன் இன்றி குழந்தைக்கு தாய்ப்பால் தரும் திருநங்கையின் பெயர் வெளியிடப்படவில்லை. அவருக்கு 35 வயது ஆகிறது. உடலகிலேயே தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை என்ற பெருமை பெற்றுள்ளார்.
அமெரிக்கா சாதனை....குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை:
Reviewed by Author
on
February 17, 2018
Rating:
Reviewed by Author
on
February 17, 2018
Rating:


No comments:
Post a Comment