அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் நடாத்தப்பட்ட திறன் வெளிப்பாட்டு சர்வமத கலை நிகழ்வு


 மன்-வட்டக்கண்டல் அரசினர் பாடசாலை மண்டபத்தில் 24-02-2018 இன்நிகழ்வு காலை 9.00 மணிக்கு மிகவும் சிறப்பாக சர்வமத சகவாழ்வு எனும் தொனிப்பொருளில் மேற்படி கலை நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் நிகழ்வு நடைபெற்றது.

அனைத்து மதங்களையும் ஒன்றிணைத்த இன்நிகழ்வில்
கறிற்ராஸ்-வாழ்வதயஇயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளார் தலைமையில்
பிரதம விருந்தினராக மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் திரு கேதீஸ்வரன் அவர்களும்
கௌரவ விருந்தினராக வட்டக்கண்டல் பாடசாலை அதிபர் திரு அந்தோனி தேவதாஸ் அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக
இஸ்லாம் மத மௌளவி அப்துல் ரகான் முகமட் ஜவாஸ்
கிறீஸ்தவ மதத்திலிருந்து அளவக்கை பங்குத்தந்தை அருட்பணி சுரேந்திரன் றெவல்
செட்டிகுளம் உதவிப்பங்குத்தந்தை பிறாங்டப்
இந்துமத குருக்கள் சிவஸ்ரீ மு.றதிமாறன் அவர்களும்
வட்டக்கண்டல் கிராம அலுவலர்திரு சிறிஸ்கந்தராசா ஆகியோருடன் சர்வமத ஒன்றிப்பில் ஆர்வம் உள்ள பொதுமக்கள் நலன்விரும்பிகள் பாடசாலை மாணவர்கள் கிராமப்பெரியார்கள் கறிற்ராஸ்-வாழ்வதய அலுவலர்கள் எனப்பலரும்  கலந்தகொண்டனர்.

 இன்நிகழ்வானது தற்காலத்தில் நடளர்விய ரீதியிலும் குறிப்பாக எமது மாவட்டத்திலும் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வு அவசியம் தேவையாதொரு நிகழ்வாக எல்லோராலும் கூறப்படும் விடயமாகவும் உள்ளது.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்திய மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு கேதீஸ்வரன் அவர்கள் கூறுகையில் கறிற்ராஸ்-வாழ்வுதயம் கடந்த காலங்களிலும் தற்காலத்திலும் பல்வேறுபட்ட மனிதநேயப்பணிகளை ஆற்றியள்ளதை நாம் அறிவோம். அத்தோடு இவ் நிறுவனம் சமயங்களுக்கிடையிலான ஒன்றிப்பினை ஏற்படுத்தும் இவ்வாறானதொரு விழிப்புணர்வுகளை மாணவ சமுதாயத்திற்குகொடுப்பது சமகாலத்தில் மிகவும் போற்றுதற்குரிய செயற்பாடாகவிருக்கின்றது.

எனவே நாம் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளாருக்கும் அவரோடு இணைந்து பணியாற்றும் பணியாளர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு இவ்வாறானதொரு சர்வமத நல்லிணக்க செய்பாடுகளை தொடர்ந்தும் ஏனைய கிராமங்களிலும் முன்னெடுப்பது நல்லதெனவும் கூறினார். மேலும் இதில் கலந்துகொண்டு உரை நிகழத்திய எனைய விருந்தினர்களும் சர்வமத தலைவர்களும் இன்நிகழ்வினை பாராட்டியதோடு-சமய சகவாழ்வு ஒன்றிப்பிற்கான ஆழமான கருத்துக்களையும் முன்வைத்து உரை நிகழ்தினார்கள்.

 இந்நிகழ்வில் சர்வமத மாணவர்களும் தத்தமது திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக சர்வமத சகவாழ்வின் கருத்தியல்களை மையமாகவைத்து வில்லுப்பாட்டு-நாடகம்-நடனம்ää வினாடிவினா-பேச்சு-கோலாட்டம் குழுப்பாடல்-போன்ற நிகழ்வுகளையும் மிகவும் தரமாக ஆயத்தம் மேற்கொண்டு நடாத்தினார்கள். இதில் குறிப்பாக கலந்துகொண்டவர்கள் இலக்கு கிராமங்களாகிய வட்டக்கண்டல் அளவக்கை செட்டிகுளம் இலுப்பைக்குளம் ஆண்டான்குளம் போன்ற கிராமத்தினை சேர்ந்த பல்சமய மாணவர்களும் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.































மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் நடாத்தப்பட்ட திறன் வெளிப்பாட்டு சர்வமத கலை நிகழ்வு Reviewed by Author on February 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.