23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றியது பிரித்தானியா: பிரதமர் தெரேசா மே அதிரடி நடவடிக்கை -
இந்த சம்பவம் தொடர்பில் ரஷ்யா தெளிவான விளக்கமளிக்காத காரணத்தினால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய Sergei Skripal என்பவர் சில ரஷ்ய உளவாளிகளை பிரித்தானிய உளவுத்துறையினரிடம் காட்டிகொடுத்தார்.
இதனால் 13 ஆண்டுகள் சிறைத்தணடனை அனுபவித்து வந்த அவர், 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரித்தானியாவில் அடைக்களம் பெற்று வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், பிரித்தானியாவின் சாலிஸ்பரி நகரில் வைத்து கடந்த நான்காம் திகதி Sergei Skripal மற்றும் அவரது மகள் மீது இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது குறித்த இவரும், கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டும் என பிரித்தானியா கோரியிருந்த அதேவேளை இதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், பிரித்தானியாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்த ரஷ்யா எவ்வித விளத்தினையும் அளிக்கவில்லை. இந்நிலையில், பிரித்தானியாவில் இருக்கு 23 ரஷ்ய அதிகாரிகளை உடன் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தெரேசா மே, இந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷ்ய அரசுதான் குற்றவாளி. ஆகையினால் 23 ரஷ்ய தூதரக அதிகாரிகள் பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரித்தானிய அரசின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பகை உணர்வு கொண்டது எனவும், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்ய அதிகாரிகள் வெளியேற ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.
23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றியது பிரித்தானியா: பிரதமர் தெரேசா மே அதிரடி நடவடிக்கை -
Reviewed by Author
on
March 15, 2018
Rating:

No comments:
Post a Comment